பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று திருவாரூரில் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளை தலைவர் அருண் தலைமை தாங்கினார். இதில் கிளை செயலாளர் சத்தியசீலன், நகர செயலாளர் சுர்ஜித், ஒன்றிய செயலாளர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மன்னார்குடி
அதேபோல பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.