புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு தூதர்கள் நியமனம், கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு தூதர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
ஊட்டி,
இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, பொதுமக்கள் இடையே வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடைபெற்றது. பேரணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, புளூமவுண்டன் சாலை, காபிஹவுஸ், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றது.
பேரணியில் திரளான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தேசிய வாக்காளர் தினம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். அதனை தொடர்ந்து தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் 18 வயது நிரம்பிய 7 மாணவ-மாணவிகளுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி பேசியதாவது:-
18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள், மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு தூதர்களாக 33 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 18 வயது நிரம்பியவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஆனால், இடம் மாறும் போது அந்த பெயர்கள் நீக்கப் படவோ அல்லது விடுபடவோ வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை செய்யலாம். இதேபோல் நகராட்சி, தேர்தல் அலுவலகங்களிலும் படிவங்கள் பெற்றும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பேசிய தாவது:- இந்தியா சுதந்திரம் பெறும் போது, சுதந்திரம் பெற்ற சில நாடுகள் ஜனநாயகத்தை இழந்து உள்ளது. இந்தியாவில் வாக்காளர்கள் வாக்களிப்பு முறை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு ஆகியவற்றை அறிந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கடந்த 2002-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து தெரிந்துகொண்டார்.
நகர்ப்புறங்களில் படித்துள்ள இளைஞர்கள், வாக்காளர்கள் அதிகமாக ஓட்டு போடுவதில்லை. ஆனால், கிராமப்புறங்களில் படிக்காத மக்கள் 90 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள். எனவே, இளைஞர்கள், மாணவர்கள் உள்ளாட்சி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரை நல்ல நபர்களை தேர்ந்தெடுக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். முதலில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். இல்லையென்றால் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கர பாண்டியன், முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் பல்வேறு அரசு துறை ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.