கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டையில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள களமருதூர், செங்குறிச்சி, சேந்தநாடு, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் அரசு வழங்கியுள்ள இலவச பஸ் பாசை பயன்படுத்தி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லூரி நேரத்தில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு அரசு பஸ் முறையாக இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் தனியார் பஸ்களில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு சென்று வந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், விருத்தாசலத்துக்கு தினசரி அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுதொடர்பாக இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வழக்கம் போல் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்துக்கு வந்தனர். ஆனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் விருத்தாசலம் செல்வதற்கு அரசு பஸ்கள் வரவில்லை. இதையடுத்து மாணவர்கள், பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து உதவி மையத்துக்கு சென்று அங்கிருந்த அதிகாரியிடம் விருத்தாசலம் செல்வதற்கு எப்போது அரசு பஸ் வரும் என்று கேட்டனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் பஸ் நிலையத்தின் எதிரே உளுந்தூர்பேட்டை- திருச்சி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், நாங்கள் கல்லூரிக்கு சென்று வர கல்லூரி நேரத்தில் முறையாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் தனியார் பஸ்களில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு சென்று வருகிறோம்.
மேலும் காலையில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே கல்லூரி நேரத்தில் விருத்தாசலத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதற்கு போலீசார், கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். தொடர்ந்து 2 அரசு பஸ்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து மாணவ- மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பஸ்களில் ஏறி கல்லூரிக்கு சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் உளுந்தூர்பேட்டை- திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.