துறைமுக வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

துறைமுக வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

Update: 2018-01-25 22:00 GMT

மும்பை,

மத்திய ரெயில்வே இது குறித்து  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

தற்போது துறைமுக வழித்தடத்தில் 604 மின்சார ரெயில்சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளின் எண்ணிக்கை 614 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 5 சேவைகள் பன்வெல், வாஷியில் இருந்து வடலாவிற்கும், 5 சேவைகள் வடலாவில் இருந்து வாஷி, பன்வெலுக்கும் இயக்கப்பட உள்ளது.

டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் 246 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை 262 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் ரெயில்கள் வரும் 31–ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்