எல்பின்ஸ்டன்ரோடு ரெயில் நிலைய நடைமேம்பால பணி அடுத்த மாத இறுதிக்குள் முடியும்

எல்பின்ஸ்டன்ரோடு ரெயில் நிலைய நடைமேம்பால பணி அடுத்த மாத இறுதிக்குள் முடியும் என்று ராணுவ அதிகாரி கூறினார்.

Update: 2018-01-25 21:45 GMT

மும்பை,

மத்திய ரெயில்வேயின் பரேல், மேற்கு ரெயில்வேயின் எல்பின்ஸ்டன்ரோடு ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இருந்த குறுகிய நடைமேம்பாலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த குறுகிய நடைபாலம் இடிக்கப்பட்டு அங்கு புதிய நடைமேம்பாலம் ராணுவம் சார்பில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதேபோல ராணுவம் சார்பில் கரிரோடு ரெயில் நிலையம் மற்றும் அம்பிவிலி ரெயில் நிலையங்களிலும் நடைபாதை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக நேற்று புனேயில் ராணுவ அதிகாரி தீரஜ் மோகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எல்பின்ஸ்டன் ரோடு மற்றும் கரிரோட்டில் கட்டப்படும் நடைமேம்பால பணிகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும். அம்பிவிலி ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் நடைமேம்பால பணிகள் வருகிற 31–ந் தேதிக்குள் முடிவடைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்