விஷஊசி போட்டு கர்ப்பிணி கொலை தந்தை உள்பட 4 பேர் கைது
விஷ ஊசி போட்டு கர்ப்பிணி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணத் தகராறில் பெற்ற மகளை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து தந்தையே தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
ராமநகர் மாவட்டம் கக்கலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சம்பங்கி (வயது 58). இவரது மகள் வீணா (24). இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு தனது கணவருடன் வீணா வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2017) வீணா கர்ப்பமானார். இதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு வீணா வந்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி தாய் வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி வீணா பிணமாக கிடந்தார். தனது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக சம்பங்கி கூறினார். பின்னர் வீணாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து கக்கலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் வீணா தற்கொலை செய்யவில்லை என்றும், விஷ ஊசி போட்டு அவரை கொலை செய்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, வீணாவை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து கக்கலிபுரா போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சம்பங்கியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது தனது கள்ளக்காதலியான லட்சுமி, முனிராஜ், இஸ்மாயில் கான் ஆகியோருடன் சேர்ந்து பெற்ற மகளை கொலை செய்ததாக சம்பங்கி கூறினார். அதைத்தொடர்ந்து, சம்பங்கி, லட்சுமி, முனிராஜ், இஸ்மாயில் கான் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். கைதான சம்பங்கியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அதாவது சம்பங்கிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கும், லட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடிக்கு சம்பங்கி விற்பனை செய்தார். அதில், ரூ.60 லட்சத்தை தனது மகள் வீணாவுக்கு அவர் கொடுத்திருந்தார். மீதி பணத்தில் கக்கலிபுராவில் புதிதாக வீடு கட்டினார்.
மேலும் அவர், கள்ளக்காதலி லட்சுமியுடன் சேர்ந்து பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ததுடன், மது குடித்து வந்துள்ளார். இவ்வாறு நிலத்தை விற்று வைத்திருந்த பணத்தை சம்பங்கி செலவு செய்துள்ளார். அதன்பிறகு, தனக்கு பணம் கொடுக்கும்படி சம்பங்கியிடம் பல முறை லட்சுமி கேட்டுள்ளார். இதனால் தனது மகள் வீணாவிடம் இருந்து பணத்தை வாங்கி லட்சுமியிடம் சம்பங்கி கொடுத்ததுடன், மதுஅருந்தி வந்துள்ளார்.
இதுபற்றி வீணாவுக்கு தெரியவந்தது. பின்னர் தனது தந்தை பணம் கேட்டபோது தான் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டி வருவதாகவும், அதனால் தன்னிடம் பணம் இல்லை என்றும் வீணா கூறியுள்ளார். பணம் கொடுக்காத காரணத்தால் தந்தை, மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுபற்றி லட்சுமியிடம் சம்பங்கி தெரிவித்தார். அப்போது அவர் பணம் கொடுக்காத மகளை கொலை செய்து விடுமாறு சம்பங்கியிடம் கூறியுள்ளார். இதற்கு சம்பங்கியும் சம்மதித்துள்ளார். அதன்படி கடந்த 11-ந் தேதி தன்னுடைய வீட்டில் படுத்திருந்த வீணாவின் வாயில் சம்பங்கி, லட்சுமி, முனிராஜ், இஸ்மாயில் கான் ஆகிய 4 பேரும் சேர்ந்து விஷத்தை ஊற்றியுள்ளனர்.
மேலும் ஊசியில் விஷத்தை ஏற்றி, அதனை வீணாவுக்கு செலுத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதாக கூறி சம்பங்கி நாடகமாடியது தெரியவந்தது. கைதான 4 பேர் மீதும் கக்கலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தகராறில் கர்ப்பிணி என்றுக்கூட பார்க்காமல் பெற்ற மகளையே கள்ளக்காதலியுடன் சேர்ந்து தந்தை கொலை செய்த சம்பவம் ராமநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.