செஞ்சி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
செஞ்சி அருகே பட்டாவுடன் இடம் வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டபடி பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பி ஏரிக்கரையை ஆக்கிரமித்து சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த வீடுகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. மேலும், அங்கு குடியிருந்தவர்களின் குடும்பத்தினருக்கு அருகே உள்ள கிராமப்புறங்களில் பட்டாவுடன் இடம் வழங்கப்பட்டது. அதை சிலர் வாங்க மறுத்து விட்டனர். இந்தநிலையில் பி ஏரிக்கரையில் வசித்தவர்கள் சிலர் செஞ்சி நகர்புறம் அருகிலேயே தங்களுக்கு இடம் வழங்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை செஞ்சி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு செஞ்சி அருகே பட்டாவுடன் இடம் வழங்க கோரி திடீரென தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டபடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, தாசில்தாரை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.