சோபனபுரத்தில் ஜல்லிக்கட்டு அனுமதி கிடைக்காத வீரர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
உப்பிலியபுரம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 254 காளைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது ஒருசில மாடு பிடி வீரர்களுக்கு அனுமதி கிடைக்காததால் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உப்பிலியபுரம்,
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்திருந்தனர்.
அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நேற்று தொடங்கியது. போட்டியை முசிறி சப்-கலெக்டர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை 10 மணியளவில் வாடிவாசல் வழியாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தி்ருச்சி, அரியலூர், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 254 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க முதல்கட்டமாக 150 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 4 கட்டமாக காளைகளை அடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சில காளைகள், என்னை பிடித்துப்பார் என்று சவால் விடுவதுபோல் வீரர்களை விரட்டி அடித்தது. சில காளைகள் வீரர்களை தூக்கி பந்தாடியது. போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய ஒரு காளை, பார்வையாளர்கள் பக்கம் ஓடிவர பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சுமார் 11.30 மணியளவில் பார்வையாளர்கள் அருகிலிருந்த தடுப்புக்கட்டைகள் திடீரென சரிந்தது. அதனை சுமார் ¾ மணி நேரம் சரிசெய்த பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மதியம் 1 மணியளவில் 2-வது கட்டமாக 150 மாடுபிடி வீரர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு காளைகளை அடக்க களத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது ஒரு சிலர், நாங்கள் நாமக்கல்லில் இருந்து வந்துள்ளோம். ரூ.100 பணம் செலுத்தி டோக்கன் பெற்றுள்ளோம். எங்களுக்கு இன்னும் காளைகளை அடக்க அனுமதி தரவில்லை என்று கூறி களத்திற்கு செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடமும் விவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள்.
தம்மம்பட்டியை சேர்ந்த ஒருகாளை யாருடைய கைக்கும் பிடிபடாமல் சோபனபுரம் ஊருக்குள் புகுந்து உப்பிலியபுரம் வரை வந்து தம்மம்பட்டி சாலையில் ஓடியது. சுமார் 3 கி.மீ. தூரம் பின்தொடர்ந்தும் அதனை பிடிக்க முடியவில்லை. இதனால் உப்பிலியபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள் அருகில் உள்ள இடங்களுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் சைக்கிள்கள், ரொக்கப்பணம், குத்துவிளக்குகள், மின் விசிறிகள், தங்க, வெள்ளி நாணயங்கள் என ரூ.6 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 8 பேரும், பார்வையாளர்கள் 3 பேரும் என மொத்தம் 11 பேர் காயம் அடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், சோபனபுரம் ஜல்லிக்கட்டு பேரவையினர், ஊர் மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உப்பிலியபுரம் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி சோபனபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் வீடுகளின் மாடிகளிலும், மரங்களிலும், லாரிகளிலும், வேன்களிலும், தண்ணீர் லாரிகளிலும் ஏறி நின்று போட்டியை கண்டுகளித்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. போட்டியில் பங்குபெற மொத்தம் 800 காளைகள் தயார் நிலையில் இருந்தன. ஆனால், போதிய நேரம் இல்லாததால் 254 காளைகள் மட்டுமே கலந்து கொண்டன.