சிவசேனாவின் முடிவை மக்கள் தீவிரமாக கருத மாட்டார்கள் எதிர்க்கட்சிகள் தாக்கு

பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் சிவசேனா தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை பொதுமக்கள் தீவிரமாக கருத மாட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

Update: 2018-01-24 00:24 GMT
மும்பை,

2019 பாராளுமன்ற, சட்டசபை தேர்தலை தனித்து சந்திக்க சிவசேனா தயாராகிவிட்டது. இதற்கான தீர்மானம் நேற்று நடந்த சிவசேனா தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறியது. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறியதாவது:-

சிவசேனாவின் இந்த முடிவு நகைப்புக்குரியது, முரணானது. அரசின் கொள்கைகளை விமர்சித்து கொண்டே ஆட்சியில் சிவசேனா நீடிக்கிறது. அரசில் இருந்து வெளியேறுவோம் என்று இதுநாள் வரை நூற்றுக்கணக்கான அறிவிப்பை சிவசேனா வெளியிட்டு விட்டது. இருந்தாலும், வெளியேற மறுக்கிறது. சிவசேனாவின் இந்த முடிவை பொதுமக்கள் தீவிரமாக கருத மாட்டார்கள்.

இவ்வாறு சச்சின் சாவந்த் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் கூறும்போது, “சிவசேனா முதலில் ஆட்சியில் இருந்து வெளியேறி விட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்கட்டும். தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார். 

மேலும் செய்திகள்