சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தைக்கு 5 ஆண்டு ஜெயில்
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன், 2-வது கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இதில், 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள்.
மும்பை,
வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமி தாயாரிடம் கூறினாள். முதலில் தாய், தனது 2-வது கணவரை கண்டித்தார். ஆனால் அவர் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். எனவே சிறுமியின் தாய் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையையும், உடந்தையாக இருந்த அவரது சகோதரியையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று முன்தினம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதில், கோர்ட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு 5 ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த சகோதரிக்கு 3 ஆண்டுகளும் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.