பள்ளிக்கரணை அருகே 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை
பள்ளிக்கரணை அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம், நுக்கம்பாளையம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிக்ஹன்ஷா (வயது 40). குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு ஜியனாஷா (35) என்ற மனைவியும், 2½ வயதில் பரி, 5 மாதமான ரேயா என்ற 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். சிக்ஹன்ஷா தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை விடுமுறையில் குஜராத் மாநிலத்துக்கு சென்றுவிட்டு ஒரு வாரத்திற்கு முன் சென்னை திரும்பினார்.
ஒரு வாரமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிக்ஹன்ஷா கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மாலை ஜியனாஷாவின் உறவினர் அவரை செல்போனில் அழைத்தபோது நீண்ட நேரமாகியும் எடுக்கவில்லை.
பலமுறை அழைத்தபோதும் போனை எடுக்காததால் நேற்று முன்தினம் இரவு அவர் நுக்கம்பாளையம் வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கை அறையில் 2 குழந்தைகளும் தலையணையின் அடியில் பிணமாக கிடந்தனர். ஜியனாஷா மின்விசிறியில் பிணமாக தூக்கில் தொங்கினார். போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி விசாரிக்க சிக்ஹன்ஷாவை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே அவரது நிலை என்ன என்பது தெரியவில்லை.
2 குழந்தைகளையும் தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி குஜராத்தில் உள்ள ஜியனாஷாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சிக்ஹன்ஷாவை பிடித்து விசாரித்தால் தான் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவாக உள்ள சிக்ஹன்ஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.