கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தக்கோரி பி.ஏ.பி. அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த கோரி பொள்ளாச்சி பி.ஏ.பி. அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
பொள்ளாச்சி,
ஆனைமலை குன்றுகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாயும் ஆறுகளான ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு மற்றும் பெருவாரிபள்ளம் ஆறு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் 30.50 டி.எம்.சி. நீரினை கிழக்கு நோக்கி திருப்பி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாசனம் செய்யப்படுகிறது. மேலும் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.
பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவுக்கு ஒப்பந்தப்படி சோலையாறு அணையில் இருந்து 12.3 டி.எம்.சி, ஆழியாறு அணையில் இருந்து 7.25 டி.எம்.சி தண்ணீர் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நீர்பங்கீடு குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை தமிழக-கேரள மாநில அதிகாரிகளும் ஆய்வு கூட்டம் நடத்துவார்கள். அதன்படி திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து அடுத்த மாதம் 14-ந்தேதி வரை கேரளாவுக்கு தினமும் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வழங்க தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கு பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் ஒப்பந்தத்தை மீறி பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறு அணைக்கு தண்ணீரை கொண்டு வந்து, கேரளாவுக்கு கொடுப்பதை கண்டித்து விவசாயிகள் பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை தாங்கினார்.போராட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு 2 சுற்று தண்ணீர் வழங்க உறுதி அளிக்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மடத்துக்குளம் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சண்முகவேல் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் விவசாயிகள் மதிய உணவை அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இதுகுறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:-
தமிழக விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், ஒப்பந்தத்தை மீறி கேரளாவுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டு உள்ளனர். பொதுப்பணித்துறை செயலாளருக்கு முறையான தகவல் தெரிவிக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர். முதலாம் மண்டல பாசனத்தில் 95 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. அதிகாரிகள் தண்ணீர் திறக்க உத்தரவாதம் அளித்ததால் குறுகியகால பயிரான சின்ன வெங்காயம் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதை தவிர மக்காசோளமும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது தண்ணீர் திறக்காததால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. ஏற்கனவே பி.ஏ.பி. பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க கடந்த 9 மாதமாக முயற்சித்தும் எந்த பலனும் இல்லை. பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறுக்கு திறக்கப்படும் தண்ணீரில் கால் பகுதி தண்ணீர் திருடப்படுகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பரம்பிக்குளம் அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் கொடுப்பதை நிறுத்த வேண்டும். முதலாம் மண்டல பாசனத்திற்கு 2 சுற்று தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மகேந்திரன் எம்.பி., பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் கலைமாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் கேரளாவுக்கு தண்ணீர் கொடுக்க பரம்பிக்குளத்தில் இருந்து ஆழியாறு தண்ணீர் திறப்பது நிறுத்துவது என்றும், திருமூர்த்தி அணையில் இருந்து வருகிற 31-ந்தேதியில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு 2 சுற்று தண்ணீர் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக பி.ஏ.பி. அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.