4-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது
ஆனைமலை அருகே 4-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைதாகி விடுதலை ஆனவர் ஆவார்.
ஆனைமலை,
ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு உயர்நிலைப்பள்ளி அருகில் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் 59 மாணவர்கள், 49 மாணவிகள் உட்பட 108 பேர் படித்துவருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தர்மராஜ் உட்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் தலைமை ஆசிரியர் தர்மராஜ் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது மாணவியை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த மாணவி தனக்கு வயிற்று வலி என்று கூறி வீட்டிற்குச் சென்று, நடந்த விபரங்களை தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அந்த மாணவியை உடனே பள்ளிக்கு அழைத்துச்சென்றனர். தனது மகளுக்கு நடந்த விபரங்கள் குறித்து தலைமை ஆசிரியர் தர்மராஜூவிடம் கேட்டனர். அதற்கு அவர் உரிய பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பொள்ளாச்சி ஆழியாறு சாலையில் திரண்டனர். பின்னர் அந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் எனக்கோரி ஆழியாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும், வால்பாறை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் தர்மராஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இருப்பினும் தலைமை ஆசிரியர் தர்மராஜை கைது செய்த பின்னர்தான் அங்கிருந்து செல்வோம் என 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கேயேஅமர்ந்து விட்டனர்.
பின்னர் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது பெற்றோர் மற்றும் உடனிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து போலீசார் தலைமை ஆசிரியர் தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆனைமலை வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் சின்னப்பராஜ் ஆழியாறு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விசாரணை நடத்திய பின்னர் கூறியதாவது:-
மாணவி மீது சில்மிஷ புகாரில் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் தர்மராஜ் மீது கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் இதே போல, ஒரு மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு கைதாகி, அந்த வழக்கு முடிந்த பின்னர்தான் ஆழியாறு ஊராட்சி ஒன்றியத்தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தற்போது அதே போன்ற புகார் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.