பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி திட்டக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி திட்டக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திட்டக்குடி,
திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் மருதாசலம் தலைமை தாங்கினார். திட்டக்குடி, நல்லூர், மங்களூர் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பருத்தி நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க பாதிக்கப்பட்ட பருத்தியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுத்து, பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தரமற்ற விதைகள்
அனைத்து பயிர்க்கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு தரமான விதைகள், உபகரணங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும், தரமற்ற விதைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பொன்னுசாமி, ரவிந்திரன், சக்திவேல், மணிகண்டன், முருகையன், காசிநாதன், சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.