கல்விக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் கல்விக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது.
சர்வதேச அளவில் இப்போதுள்ள கல்வி முறைகள் மற்றும் வசதிகளை ஹங்கேரி மாணவர்களுக்கு எடுத்துக்காட்டும் சிறந்த நிகழ்வாக இது நடந்து முடிந்தது. எஜுகேசியா எனப்படும் இந்த கல்விக் கண்காட்சி, 2000-வது ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. 18-வது ஆண்டு கண்காட்சி இந்த ஆண்டு ஹங்கேரியில் நடத்தப்பட்டுள்ளது.
கண்காட்சியில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் பார்வையிட வசதி செய்யப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கல்வி மேம்பாட்டு உபகரணங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. புதுமையான கல்வி முறைகள் பற்றிய உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. காணொளி விளக்கப்படங்கள், நூல்கள் விற்பனை செய்யப்பட்டன.
உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களும் இதில் பங்கெடுத்தன. ஹங்கேரியில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளும் கண்காட்சியில் கலந்து கொண்டு, தங்கள் நிறுவன கல்வி முறையின் மேன்மை பற்றி மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விளக்கம் அளித்தன. கையேடுகள், புத்தகங்களை வினியோகித்தன. சிறந்த கல்வியாளர்களும் அதிக அளவில் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
கடந்த ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் கண்காட்சியில் பங்கேற்றனர். இந்த ஆண்டு அதைவிடவும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.