இந்தியாவில் “பொது சிவில் சட்டம் வர வாய்ப்பில்லை” பொதுக்கூட்டத்தில் அன்வர் ராஜா எம்.பி. பேச்சு
இந்தியாவில் பொது சிவில் சட்டம் வர வாய்ப்பில்லை என்று ராணிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்வர் ராஜா எம்.பி.பேசினார்.
சிப்காட்( ராணிப்பேட்டை),
மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் சட்டம் மற்றும் ‘ஹஜ்’ மானியம் ரத்து ஆகியவற்றை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராணிப்பேட்டை சர் ஜமாத் செயலாளர் அயாத் பாஷா தலைமை தாங்கினார். சர் ஜமாத் தலைவர்கள் வாலாஜா அக்பர்செரீப், ராணிப்பேட்டை அப்துல்வாகித், ஆற்காடு கரீம்செரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜம் இய்யத் உலமாவின் வேலூர் மாவட்ட செயலாளர் அப்துல்கரீம் காஷிபி வரவேற்றார். ஆற்காடு குரான் பள்ளி முதல்வர் ஜகீர் அகமது இறைவணக்கம் பாடினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முகம்மதுஜான், தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.காந்தி, முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர்அலி, ஜல் இய்யத் உலமா ஹிந்த் அமைப்பின் மாநில தலைவர் மன்சூர் காஷிபி, த.மு.மு.க. மாநில செயலாளர் காஜா கனி, திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. சிறுபான்மை நல பிரிவு செயலாளரும், எம்.பி.யுமான அன்வர் ராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குரான் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் இயற்றப்பட்டது கிடையாது. உலக மக்களுக்காக இயற்றப்பட்டது. திருக்குறளும் உலக மக்களுக்காக இயற்றப்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு துணை நின்றவர் மறைந்த முதல் - அமைச்சர் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு வணக்கம் வேறு, வாழ்க்கை வேறு அல்ல. வணக்கமே வாழ்க்கை. வாழ்க்கையே வணக்கம். இந்தியாவில் ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுகிற உரிமையை இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் பொது சிவில் சட்டம் வர வாய்ப்பில்லை. நான் பாராளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழில் பேசியதற்கு 2 காரணம் உண்டு. ஒன்று நான் இதை எதிர்ப்பதை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும், மற்றொன்று ஆங்கிலத்தில் பேசியிருந்தால் அங்கிருக்கும் மற்ற எம்.பி.க்கள் எனக்கு எதிராக பேசி எனது பேச்சிற்கு இடையூறு செய்திருப்பார்கள். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் இடையூறு ஏற்பட்டால் நான் கூற வேண்டிய கருத்தை கூறியிருக்க முடியாது.
இந்த மசோதாவை அரசியல் சாசன சட்டத்தை மேற்கோள் காட்டி ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, மேல்விஷாரம் உள்பட பல பகுதிகளை சேர்ந்த அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் த.மு.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் முகமது அசன் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கு பின்னர் அன்வர் ராஜா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முத்தலாக் தடை சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பாக இந்த தடை சட்டம் உள்ளது. மூன்று முறை ஒரே நேரத்தில் தலாக் கூறுவது தவறு என்று தான் நீதிமன்றம் கூறுகிறது. இதைத்தான் ஷரியத்தும் கூறுகிறது. இஸ்லாமிய சட்டமும் இதை தான் கூறுகிறது. ஆனால் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் 3 ஆண்டு தண்டனை மற்றும் அபராதம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிரானது.
இதை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர். மாநில அரசும் ஏற்கவில்லை எதிர்க்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசு தொடுத்துள்ள ‘சிவில் வாராக’ இந்தியாவில் வாழ்கிற மைனாரிட்டி மக்கள் இதை பார்க்கின்றனர். இந்தியாவில் வாழ்கின்ற முஸ்லிம்களின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். ஒட்டுமொத்தமாக இதை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.
முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் கொண்டு வரும் போது அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பிக்கள் எதிர்ப்போம், எதிர்த்தும் வாக்களிப்போம்.
‘ஹஜ்’ மானியம் ரத்து என்பதை திரும்ப பெற வேண்டும் என தமிழக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.