யார் தனிக்கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு இருக்காது ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
யார் தனிக்கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க. வுக்கு பாதிப்பு இருக்காது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கோவை,
கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த பஸ் கட்டணம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட பிறகும் அரசுக்கு ரூ.9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகம் உள்ளிட்டவற்றைவிட தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் குறைவு. டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம் தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
யார் வேண்டுமானாலும் தனிக்கட்சி தொடங்கலாம். அவர்களது செயல்பாடுகளை பொறுத்து மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு இருக்காது. தினகரனுடன் இருக்கும் எம்.எல்.ஏ.க்களே அவரை எதிர்த்து வருகிறார்கள் என்றால், அவர் நிலை என்னவாகும் என்பதை சொல்லவேண்டியதில்லை.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பாக யாரும் கருத்துகள் கூறாமல் இருப்பதே ஏற்புடையதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.