நாட்டின் பன்முகத்தன்மையை மத்திய அரசு சிதைத்து வருகிறது வைகோ பேட்டி
நாட்டின் பன்முகத்தன்மையை மத்திய பாரதீய ஜனதா அரசு சிதைத்து வருகிறது என்று வைகோ கூறினார்.
கோவை,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந் தேதி தி.மு.க நடத்தும் போராட்டத்தில், ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க பங்கேற்கும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில் தி.மு.க.வுடன் ம.தி.மு.க. வினர் கலந்துகொள்வார்கள்.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அடிப்படையில் தான் நடத்தப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பதை கண்டிக்கிறோம்.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட்தேர்வு பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு அனைத்து வகைகளிலும் பன்முகத்தன்மையை சிதைத்து வருகிறது. எல்லா துறைகளிலும் ஒற்றை தன்மையுடன் செயல்படுவதால், மதசார்பின்மை, இறையாண்மை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.