மும்பையில் நடந்த வன்முறையில் ரூ.88 லட்சத்திற்கு வாகனங்கள் சேதம் போலீசார் அறிவிப்பு
பீமா-கோரேகாவ் சம்பவத்தை கண்டித்து மும்பையில் நடந்த வன்முறையில் ரூ.88 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் அறிக்கையில் கூறியுள்ளனர்.
மும்பை,

வன்முறை
புனேயில் பீமா-கேரேகாவ் சம்பவத்தை கண்டித்து மும்பையில் கடந்த 3-ந் தேதி தலித் அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் மும்பையின் பல்வேறு பகுதிகளில் பெஸ்ட், அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதுகுறித்து போலீசார் அறிக்கை ஒன்றை தயார் செய்து உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரூ.88 லட்சம் சேதம்
கடந்த 2 மற்றும் 3-ந் தேதி மும்பையில் நடந்த கலவரத்தின் போது 674 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 263 பெஸ்ட் பஸ்களும், 171 அரசு பஸ்களும் அடக்கம். இதுதவிர 240 தனியார் வாகனங்களும் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டன. மொத்தம் ரூ.88 லட்சத்திற்கு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தொகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.