அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
விருத்தாசலம் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக்கோரி கிராம மக்கள் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ளது விளாங்காட்டூர். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர் வசதி, தனிநபர் கழிப்பறை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்துதல் உள்ளிட்ட கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்தனர். பலமுறை மனு அளித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அடிப்படை வசதிக்கு தேவையான நிதியை கிராம மக்களே வீடு, வீடாக சென்று பிச்சையெடுத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று விளாங்காட்டூரில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இதற்காக நிதியை தாங்களே பிச்சையெடுத்து திரட்டுவதாகவும் தண்டோரா மூலம் அறிவித்தனர். தொடர்ந்து அவர்கள் வீடு, வீடாக சென்று பிச்சையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான நிதியை திரட்டுவதற்காக கிராம மக்களே பிச்சையெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.