புதியம்புத்தூர், ஸ்ரீவைகுண்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா

புதியம்புத்தூர், ஸ்ரீவைகுண்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

Update: 2018-01-20 21:00 GMT
ஓட்டப்பிடாரம்,

புதியம்புத்தூர், ஸ்ரீவைகுண்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

சமுதாய வளைகாப்பு விழா

தமிழக அரசு சார்பில், ஓட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதியம்புத்தூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. ஓட்டப்பிடாரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தங்கமணி தலைமை தாங்கினார். மகளிர் குழு தலைவி ஜெயா, புதியம்புத்தூர் ஊராட்சி செயலாளர் உத்திரக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா வரவேற்றார். பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அன்புமாலதி, வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் மொத்தம் 283 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள் அடங்கிய புத்தகம், சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுசீலா, புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் இசக்கியம்மாள், தாயம்மாள், பேச்சியம்மாள், ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ஜூலியட் நன்றி கூறினார்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயா, மேற்பார்வையாளர்கள் கிறிஸ்டி விஜயராணி, நிர்மலா, சீதாலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, வளையல், பழங்கள், குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது.

விழாவில் சுகாதார துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பத்மா, சுகாதார மேற்பார்வையாளர் பவானி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பவானி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்