உலக மகா பணக்காரராகத் திகழ்ந்த முஸ்லிம் மன்னர்
இன்று உலகின் முன்னணி பணக்காரர்களாக பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க், ஜெப் பசோஸ் போன்றோர் உள்ளனர். ஆனால், வரலாற்றுக் காலத்தில் உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்த முஸ்லிம் மன்னர் மன்சா மூசா பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா உலக வரலாற்றிலே மகா செல்வந்தராகக் கருதப்படுகிறார். 1280 முதல் 1337-ம் ஆண்டு வரை மாலியை மூசா ஆண்டபோது, அங்கு தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் ஏராளமாகக் கிடைத்தன.
உலகம் முழுவதும் தங்கத்துக்கான தேவை உச்சத்தில் இருந்த சமயத்தில், வளமிக்க மாலியை மூசா ஆண்டார். அதனால் மாலியின் கருவூலங்களில் செல்வங்கள் பொங்கி வழிந்தன.
மன்சா மூசாவின் இயற்பெயர், மூசா கெய்ட்டா. இவருக்கு முடிசூட்டப்பட்ட பிறகு மன்சா என்று அழைக்கப்பட்டார். ‘மன்சா’ என்றால் மன்னர் எனப் பொருள்.
தற்போதைய செனகல், காம்பியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர், நைஜீரியா ஆகியவை மூசாவின் ஆட்சியின் கீழ் இருந்தன. அப்பகுதிகளில் இவர் கட்டிய பல மசூதிகள் இன்னும் உள்ளன.
தற்போதைய காலத்தில் மன்சா மூசாவின் சொத்து மதிப்பை துல்லியமாகக் கணக்கிடுவது கடினமான ஒன்று என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் அவருக்கு 4 லட்சம் மில்லியன் டாலர் சொத்துக்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2.5 டிரில்லியன் ரூபாயாகும்.
இன்று உலக பணக்காரராக விளங்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பசோசின் சொத்து மதிப்பு, ஒரு லட்சத்து 6 ஆயிரம் மில்லியன் டாலர்கள்தான். தற்போது உயிருடன் இருக்கும் பெரும் பணக்காரர் களில் ஒருவர் ஜெப் பசோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் புனித நகரான மெக்காவுக்கு மன்சா மூசா மேற்கொண்ட பயணம் குறித்த சுவாரசியமான தகவல்களும் உள்ளன.
மூசாவுடன் 60 ஆயிரம் பேர் மெக்காவுக்குப் பயணம் செய்திருக்கின்றனர்.
அவர்கள் 80 ஒட்டகங்களில் 136 கிலோ தங்கத்தையும் கொண்டு சென்றனர். மூசா மிகவும் தாராள மனம் உடையவர் என கூறப்படு கிறது. எகிப்து தலைநகரான கெய்ரோவை மூசாவின் பட்டாளம் கடக்கும்போது, அங்கிருந்த ஏழை மக்களுக்குத் தங்கத்தை தானமாக அள்ளி வழங்கியிருக்கிறார் மூசா.
மாலியிலும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் ஏராளமான பள்ளிகளையும், நூலகங்களையும் தன் ஆட்சிக் காலத்தில் மூசா கட்டினார்.
25 ஆண்டுகள் மன்னராக இருந்த மூசா, 1337-ம் ஆண்டு இறந்தார்.
இறுதிவரை செல்வத்தில் மிதந்த மன்சா மூசா, தனது நற் செயல்களால் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறார்.