விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
பெங்களூரு,

வருமானம் இரட்டிப்பு அடையும்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு நாள் பயணமாக நேற்று கர்நாடகத்திற்கு வந்தார். பெங்களூரு நாகரபாவியில் உள்ள சமூக மற்றும் பொருளாதார மாற்றம் குறித்த நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டும், தேவையான கடன் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதை செய்தால் விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும். விவசாயிகள் மரபு விவசாயத்துடன் துணை தொழில்களான ஆடுகள், கறவை மாடுகளை வளர்த்தல், பால் உற்பத்தி செய்தல், மீன் வளர்த்தல், கோழி வளர்த்தல் போன்ற தொழில்களை செய்தால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு அடையும். விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டிய நிலை வராது.
நவீன உபகரணங்களை...
துணைத்தொழில்களை செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது இல்லை. பிரதான விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் விவசாயிகள், விளைச்சல் கைக்கு கிடைக்காதபோது தற்கொலை வழியை தேடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையிலும் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்.
விவசாயிகள் நவீன உபகரணங்களை பயன்படுத்தி விவசாயத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். தரமான விதைகளை விவசாய பல்கலைக்கழகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்ய வேண்டியது மத்திய-மாநில அரசுகளின் கடமை ஆகும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டத்தை தீட்டியுள்ளது. இதை தீவிரமாக செயல்படுத்த விவசாய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உழைக்க வேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
குறைந்த விலையில் மருந்துகள்
மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார் பேசுகையில், “மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு ஏழை நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் 3,049 மலிவு விலை மருந்து கடைகளை திறந்து இருக்கிறோம். இதயநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் “ஸ்டென்ட்” கருவியின் விலையை குறைத்து இருக்கிறோம். வெங்கையா நாயுடு நகர வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தபோது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை கொண்டு வந்தார்” என்றார்.