மும்பை-பெங்களூரு குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் துணிகரம் வியாபாரியிடம் 19 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை
மும்பை-பெங்களூரு குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வியாபாரியிடம் 19 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
மும்பை-பெங்களூரு குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வியாபாரியிடம் 19 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
19 கிலோ தங்க கட்டிகள்
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிஜாய். இவர், மும்பையில் தங்க நகைகள் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மும்பையில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிஜாய் பெங்களூருவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் 19 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை ஒரு பையில் வைத்து எடுத்து வந்திருந்தார். தங்க கட்டிகளை பெங்களூருவில் உள்ள வியாபாரிகளிடம் கொடுத்து தங்க நகைகளாக மாற்றுவதற்காக அவர் எடுத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது.
ரெயிலில் வந்த பிஜாய் அயர்ந்து தூங்கி விட்டார். மறுநாள்(18-ந் தேதி) அதிகாலையில் ஆந்திர-கர்நாடக எல்லையில் ரெயில் வந்த போது பிஜாய் எழுந்தார். அதற்குள் 19 கிலோ தங்க கட்டிகள் அடங்கிய பையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தார்கள். தங்க கட்டிகள் இருந்த பை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு பிஜாய் அதிர்ச்சி அடைந்தார்.
கர்நாடக-ஆந்திர எல்லையில்...
இதையடுத்து, அந்த ரெயில் பெங்களூரு கன்டோண்மென்ட் ரெயில் நிலையம் வந்ததும், உடனடியாக ரெயில்வே போலீசாரிடம் பிஜாய் புகார் கொடுத்தார். அதில், 19 கிலோ தங்க கட்டிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இதுதொடர்பாக பிஜாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கர்நாடக-ஆந்திர எல்லையில் ரெயில் வந்தபோது இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக ஆந்திர மாநிலம் தர்மாவரம் அருகே வரும்போது தான் பிஜாய் வைத்திருந்த தங்க கட்டிகள் அடங்கிய பையை மர்மநபர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் மும்பையில் இருந்து பிஜாய் தங்க கட்டிகளை எடுத்து செல்வதை நன்கு அறிந்த நபர்களே, அவர் அயர்ந்து தூங்கிய போது தங்க கட்டிகளை கொள்ளையடித்து சென்றிருப்பதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை ஆந்திராவில் நடந்திருப்பது தெரியவந்திருப்பதால், இந்த வழக்கை தர்மாவரம் ரெயில்வே போலீசாருக்கு மாற்ற கன்டோண்மென்ட் ரெயில்வே போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்றாலும், தங்க கட்டிகளை கொள்ளையடித்த மர்மநபர்களை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ரெயில்வே போலீசார் ஆய்வு செய்து மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ரெயில்வே உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாபாரியிடம் ரெயிலில் 19 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளைபோன தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.