ஏரல் அருகே தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
ஏரல் அருகே தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏரல்,

தலையாரிக்கு அரிவாள் வெட்டு
ஏரலை அடுத்த மங்களகுறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற வள்ளி (வயது 55). இவர் அப்பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக (தலையாரி) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் ஏரல் சலூன் கடையில் முடி வெட்டி கொண்டிருந்தபோது, அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்துக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில், மங்களகுறிச்சியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான முத்துசெல்வம் (41), முத்துசாமி (37) ஆகிய 2 பேரும் சேர்ந்து, அப்பகுதியில் சரிந்து கிடந்த வேப்ப மரத்தை வெட்டி கடத்த முயன்றனர். இதனை இசக்கிமுத்து கண்டித்தார். மேலும் அவர் அந்த மரத்தை தாசில்தார் மூலம் ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துசெல்வம், முத்துசாமி ஆகிய 2 பேரும் சேர்ந்து இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து முத்துசெல்வம், முத்துசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இசக்கிமுத்துவை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் நேற்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ்ஜெயமணி, உதவி அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.