புஞ்சைபுளியம்பட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புஞ்சைபுளியம்பட்டி பஸ்நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைபிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-01-19 22:15 GMT
புஞ்சைபுளியம்பட்டி,

முஸ்லீம்களுக்கு வழங்கிய ஹஜ் மானியத்தை மத்திய அரசு நிறுத்தியதை கண்டிப்பது. புதுடெல்லியில் திருப்பூர் மாணவன் சரத்பிரபு மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எல்.முத்துக்குமார் தலைமை தாங்கினார். கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இலியாஸ், வட்டார தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். 

மேலும் செய்திகள்