மலாடு இளம்பெண் கொலை வழக்கு: ஒரு மாதத்திற்கு பிறகு நண்பர் சிக்கினார்
மலாடில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு மாத விசாரணைக்கு பிறகு அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,

இளம்பெண் கொலை
தானே மிராரோடு பகுதியை சேர்ந்தவர் அர்பிதா(வயது24). இவர் கடந்த மாதம் 11-ந்தேதி காலை மும்பை மலாடில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த கட்டிடத்தின் 15-வது மாடியில் வசிக்கும் அர்பிதாவின் ஆண் நண்பர் அமித்(28) வீட்டில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் முதலில் கருதினர்.
இந்தநிலையில் அர்பிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் கடந்த ஒரு மாதமாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், அர்பிதா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
நண்பர் கைது
இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் சம்பவத்தின் போது அர்பிதாவுடன் இருந்த அவரது காதலர் பங்கஜ் மற்றும் நண்பர் அமித்திடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அமித்திடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் போலீசார் அர்பிதாவின் நண்பர் அமித்தை கைது செய்தனர். பின்னர் அவரை போரிவிலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 20-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.