எலக்ட்ரீசியனை குத்திக்கொன்ற மாற்றுத்திறனாளி கைது உடல் ஊனத்தை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

உடல் ஊனத்தை கிண்டல் செய்த ஆத்திரத்தில் எலக்ட்ரீசியனை கத்தியால் குத்திக்கொன்ற மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-01-16 22:00 GMT
மும்பை,

உடல் ஊனத்தை கிண்டல் செய்த ஆத்திரத்தில் எலக்ட்ரீசியனை கத்தியால் குத்திக்கொன்ற மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.

கிண்டல்

மும்பை சாக்கிநாக்காவை சேர்ந்தவர் அப்துல் மோமின்(வயது55). எலக்ட்ரீசியன். இவர் மனைவி சாய்தா மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மாற்றுத்திறனாளி முகமது சேக்(44). பான் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது உடல் ஊனத்தை அப்துல் மோமின் கிண்டல் செய்து வந்தார். இதனால் முகமது சேக்கிற்கு, அப்துல் மோமின் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

குத்திக்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்றும் அப்துல் மோமின், முகமதுசேக்கை கிண்டல் செய்துள்ளார். இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முகமது சேக், தான் வைத்திருந்த கத்தியால் அப்துல் மோமினை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அப்துல் மோமின் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜவாடி போலீசார் மாற்றுத்திறனாளி முகமது சேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்