திருவள்ளுவர் தினத்தன்று மது விற்ற 15 பேர் கைது 380 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தன்று மது விற்பனை செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 380 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-01-16 22:15 GMT
நாமக்கல்,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை மீறி யாராவது மது விற்பனையில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தடையை மீறி மது விற்பனை செய்த தனபால் (வயது 45), கணேசன்(48), சுரேஷ் (35), ஜானகிராமன் (30), ரவி (39), பொன்னுசாமி (48), முத்து (48), ஆனந்த் (25) என 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 105 மதுபாட்டில்கள் மற்றும் மதுவை கடத்த பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

15 பேர் கைது

இதேபோல் திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தடையை மீறி மது விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 275 மதுபாட்டில்களும், 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தடையை மீறி மது விற்பனை செய்த 15 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 380 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்