மோட்டார் சைக்கிள் - அரசு பஸ் மோதல்: ஓய்வு பெற்ற ஆசிரியர், மருமகனுடன் பலி
திருவாரூர் அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அவரது மருமகன் பலியானார்கள். இதையடுத்து சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
நாகை மாவட்டம் அத்திபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 59). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது இளைய மகள் அபிநயா. இவருக்கும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் (31) என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனந்தகிருஷ்ணன் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு அவர் வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று இரவு ஆனந்தகிருஷ்ணன், தனது மாமனார் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆனந்தகிருஷ்ணன், முருகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அத்திபுலியூர் கிராமத்திற்கு தகவல் பரவியது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பழுதடைந்த சாலையை சீரமைக்காதது தான் விபத்துக்கு காரணம் என கூறி, சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது சிலர் விபத்துக்கு காரணமான பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.