கார் மீது டிராக்டர் மோதி 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் பலி

சாங்கிலி அருகே கார் மீது டிராக்டர் மோதிய பயங்கர விபத்தில் 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.

Update: 2018-01-13 23:12 GMT
சாங்கிலி,

மராட்டிய மாநிலம் சத்தாரா அருகே உள்ள ஆந்த் பகுதியில் நடந்த மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் நேற்று சாங்கிலியில் உள்ள குண்டல் பகுதிக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். கார் சாங்கிலி பகுதியில் உள்ள காடேகாவ் - சாங்கிலி ரோட்டில் வந்து கொண்டு இருந்தது. அப்போது கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு எதிரே வந்த டிராக்டர் கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாங்கிலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் கார் மற்றும் டிராக்டரில் பயணம் செய்தவர்கள். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்