மொபட்டில் சென்ற வியாபாரி பலி அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
நீடாமங்கலம் அருகே மொபட்டில் சென்ற வியாபாரி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாமணியாற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் செல்வம் (வயது38). இவர். கோலமாவு விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு செல்வம் மொபட்டில் மன்னார்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சம்பாவெளி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், செல்வம் சென்ற மொபட் மீது மோதியது. இதில் செல்வம் படுகாயமடைந்தார்.
பரிதாப சாவு
இது குறித்து தகவலறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு ஏட்டு கமலநாதன் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த செல்வத்தை நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் மீது எந்த வாகனம் மோதியது? வாகனத்தை ஓட்டி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.