பெங்களூருவில் வீடுகளின் கதவை உடைத்து திருடி வந்த வாலிபர் கைது
பெங்களூருவில் வீடுகளின் கதவை உடைத்து திருடி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.24 லட்சம்மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டன.
பெங்களூரு,
பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு தெற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணம், பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டு வந்தது. இதில், ஈடுபடும் கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், பசவனகுடி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் பிரபல திருடனான துமகூரு மாவட்டம் ஒசமுன்டி பேட்டை கிராமத்தை சேர்ந்த சையத் அகமது (வயது 32) என்பவரை கைது செய்துள்ளனர்.
இவர், டிப்-டாப் உடை அணிந்து கொண்டு நகரில் பூட்டி கிடக்கும் வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் செல்வார். பின்னர் அந்த வீடுகளின் கதவை சையத் அகமது தட்டுவார். அப்போது வீட்டு உரிமையாளர்கள் வெளியே வரவில்லை என்றாலோ, அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலோ, அந்த வீடுகளில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகள், பொருட்களை திருடிவிட்டு செல்வதை அவர் தொழிலாக வைத்திருந்தார்.
ஒரு வேளை டிப்-டாப் உடை அணிந்து கொண்டு வீட்டுக்கதவை தட்டும்போது யாராவது வந்து விட்டால், தான் ஒரு விற்பனை பிரதிநிதி என்று கூறிக் கொண்டு, அவர் களிடம் ஏதாவது பொருட்கள் வேண்டுமா? என்று கேட்டுவிட்டு அங்கிருந்து செல்வதை சையத் அகமது வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும் வீடுகளில் திருடும் தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக தனக்கு தெரிந்த பெண்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை அடகு கடைக்கு வாடகை காரில் சையத் அகமது அழைத்து செல்வார். இதனால் அவர் மீது எந்த சந்தேகமும் வராமல் இருந்தது.
ஆனால் ஏற்கனவே பெங்களூரு மட்டுமின்றி துமகூரு, பெங்களூரு புறநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணத்தை சையத் அகமது திருடியதாக கிரிநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் விற்பனை பிரதிநிதி என்று கூறிக் கொண்டு திருட்டு சம்பவங்களில் சையத் அகமது ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரை கைது செய்திருப்பதன் மூலம் பசவனகுடி, ஜெயநகர், ஜே.பி.நகர், பேடராயனபுரா, கெங்கேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 6 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான சையத் அகமது கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய ரூ.24 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்க நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளன. அவர் மீது பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.