டிப்ளமோ என்ஜினீயருக்கு 8 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
டிப்ளமோ என்ஜினீயருக்கு 8 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வடிவேல்பிரசாந்த் ஞானவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நான் 2014–ம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தேன். பின்னர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பித்தேன். இதனையடுத்து போலீஸ் விசாரணையில் எனக்கு எதிராக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பாஸ்போர்ட் அதிகாரியிடம் ஆஜராகி, 2016–ம் ஆண்டில் பதிப்புரிமை சட்டத்தின்கீழ் கூடல்புதூர் போலீசார் என் மீது பொய்யான வழக்குபதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு குறித்து எனக்கு இதுவரை கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்படவில்லை. என் மீதான வழக்கின் இறுதி அறிக்கை இதுவரை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் அந்த வழக்கு குறித்து எனக்கு உரிய விவரம் தெரியாததால், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் அதுபற்றி குறிப்பிடவில்லை.
எனவே எனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் என் மீதான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தாலோ அல்லது வழக்கு முடித்துவைக்கப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்தாலோ தான் என்னுடைய மனு மீது முடிவு செய்ய முடியும் என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துவிட்டார். நீதிமன்றம் கூறும் வரை என் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாக கருத முடியாது என்றும், அதன்படி எனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 16.10.2017 அன்று மீண்டும் மனு அனுப்பினேன். ஆனாலும் என் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பாபு ராஜேந்திரன் ஆஜரானார்.
முடிவில், “மனுதாரர் மனுவை பரிசீலித்து 8 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.