சிறுவன் கொலை வழக்கில் தப்பி ஓடிய தாய் மாமா கைது

ஆவடியில், குடும்பத்தகராறில் சிறுவன் கொலை வழக்கில் தப்பி ஓடிய தாய் மாமா கைது செய்தனர்.

Update: 2018-01-13 22:30 GMT
ஆவடி,

ஆவடி பக்தவச்சலபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சேவியர். இவருடைய மகன் பாலாஜி (வயது 18). இவர், ஆவடியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

பாலாஜியின் தாய்மாமா பிரான்சிஸ் சேவியர்(55) அதே பகுதியில் வசித்து வருகிறார். பாலாஜி குடும்பத்துக்கும், பிரான்சிஸ் சேவியர் குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 10-ந்தேதி இரவு இது தொடர்பாக பிரான்சிஸ் சேவியர், பாலாஜியின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதை பாலாஜி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் சேவியர், கத்தியால் மருமகன் பாலாஜியை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரான்சிஸ் சேவியரை நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்