குளிர்பான ஆலை கட்டுமானபணியை தடுக்க கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஜலத்தூரில் குளிர்பான ஆலை கட்டுமானபணியை தடுக்க கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-01-12 22:45 GMT

பொள்ளாச்சி,

ராமபட்டிணம், நல்லூத்துக்குளி, தேவம்பாடி வலகபொதுமக்கள் நேற்று பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் சப்–கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:– ஜலத்தூர் பிரிவில் அமைந்துள்ளதனியார் குளிர்பான ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித முறையான அனுமதியின்றி கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இதனை அறிந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள்மூலமாக அதிகாரிகள்தடுத்து நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில், விதிமுறையை கடந்த சில நாட்களாககட்டுமான பணிகள் மீண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனைதாங்கள்ஆய்வு செய்துஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இத்தொழிற்சாலை அமைவதால் ஆழியாறு பாசன படுகை உள்ள வளமான விவசாய நிலங்கள் பாழ்படுவதுடன் மக்களின்வேலை வாய்ப்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சுற்றுவட்டார ஊராட்சிகிராமங்களில் கிராமசபைகளில் இக்கம்பெனி அமைவதை தடுக்ககோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே பொது மக்கள் நலன் கருதி கம்பெனியின் கட்டுமானப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன்கம்பெனிகட்டிடத்தை முத்திரையிட்டு மூட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்