அணி மாறுவதை தடுக்கவே எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

அணி மாறுவதை தடுக்கவே எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-01-10 23:05 GMT

காரைக்குடி,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் புதுவயல் கிராமத்தில் பா.ஜனதா அமைப்புசாராதொழிலாளர் சங்க நிர்வாகி சிதம்பரம் வீட்டுக்கு நேற்று வந்தார். சிதம்பரம் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் புதுமணமக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் காரைக்குடியில் கட்சியின் மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் குரு.நாகராஜன் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

போக்குவரத்துக்கழக தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பயிற்சி பெறாத டிரைவர்களை வைத்து அவசர கதியில் அரசு பஸ்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செயல் கண்டிக்கத்தக்கது. விபத்துகளை கருத்தில் கொண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதை தடுக்கவே அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் மட்டும் தமிழர்கள் இல்லை. நாங்களும் தமிழர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்