போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் 7–வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் நேற்று தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர்,
போக்குவரத்துகழகபஸ் தொழிலாளர்கள் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் நேற்று 7–வது நாளாக அவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனினும் போக்குவரத்து கழகநிர்வாகம் இம்மாவட்டத்தில் 78 சதவீதபஸ்களை இயக்கஏற்பாடு செய்துள்ளது.அதிகாலை 6 மணிக்கு மேல் பஸ்கள்இயக்கப்பட்டன.எனினும் கிராமங்களுக்கு குறைவாகபஸ்கள்இயக்கப்படுவதால் கிராமமக்கள்அவதிக்குள்ளாயினர். கிராமங்களில் இருந்து வரும் பள்ளிமாணவர்களும் கடும் சிரமப்படும் நிலைஉள்ளது.
நேற்றுதங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திபஸ் தொழிலாளர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தஆர்ப்பாட்டத்தில் 250–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்கலந்து கொண்டனர்.மாவட்டத்தில் பரவலாக வேலைநிறுத்தம் செய்து வரும் பஸ் தொழிலாளர்கள்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரச்சினை செய்யும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகநிர்வாகம் பஸ்களை இயக்குவதற்காகதற்காலிகமாக 160 டிரைவர்களையும், 174 கண்டக்டர்களையும் ஆக மொத்தம் 334 பேரைநியமனம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக பொது மேலாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.இதுவரை விருதுநகர் போக்குவரத்து கழகத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.