பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
திருச்சி,
வெளி ஊர்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாட செல்வது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பு இருந்தே திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையங்களில் அதிக அளவு வெளியூர் செல்லும் பொது மக்கள் கூட்டம் இருக்கும்.
இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ஆண்டும் திருச்சி மாநகராட்சி மற்றும் போலீசார் மூலம் திருச்சி மன்னார்புரம் மற்றும் வில்லியம்ஸ் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக திருச்சி மன்னார்புரம் மற்றும் வில்லியம்ஸ் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
உறுதி செய்யப்படவில்லை
திருச்சி மாநகர போலீசார் சார்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதே போன்று மாநகராட்சி சார்பில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணியும் தொடங்கி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. மன்னார்புரத்தில் இருந்து மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். வில்லியம்ஸ் சாலையில் இருந்து தஞ்சை, வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. சென்னை, கரூருக்கு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் எப்போது இயக்கப்பட உள்ளது என்பது உறுதி செய்யப்பட வில்லை” என்றனர்.