8 லட்சத்து 47 ஆயிரத்து 449 வாக்காளர்கள் இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 449 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2018 இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கோவிந்தராஜ் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் 2018-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கரூர், குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தாசில்தார் அலுவலகங்கள், கரூர், குளித்தலை நகராட்சி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 449 வாக்காளர்கள் உள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதி
அரவக்குறிச்சி சட்ட மன்ற தொகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி 98 ஆயிரத்து 221 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 4ஆயிரத்து 930 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 151 வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர்.
இதில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 796 ஆண் வாக்காளர்களும், 815 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,611 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போன்று 2,131 ஆண் வாக்காளர்களும், 2,610 பெண் வாக்காளர்களும் என 4,741 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 96 ஆயிரத்து 886 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 3ஆயிரத்து 135 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 21 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.
கரூர் தொகுதி
கரூர் சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின் படி ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 342 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து21 ஆயிரத்து 740 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 84 வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். இதில் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 853 ஆண் வாக்காளர்களும், 784 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1637 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று 1,878 ஆண் வாக்காளர்களும், 2,336 பெண் வாக்காளர்களும் என 4,214 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 317 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 188 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 507 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஒரு லட்சத்து 420 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 878 பெண் வாக்காளர்களும், 42 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 340 வாக்காளர்கள் இருந்தனர். இதில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 824 ஆண் வாக்காளர்களும், 848 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,672 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று 1,407 ஆண் வாக்காளர்களும், 1,780 பெண் வாக்காளர்களும் என 3,187 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 99 ஆயிரத்து 837 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 946 பெண் வாக்காளர்களும், 42 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 825 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.
குளித்தலை
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 582 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 670 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 255 வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். இதில் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 737 ஆண் வாக்காளர்களும், 815 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,552 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று 771 ஆண் வாக்காளர்களும், 940 பெண் வாக்காளர்களும் என 1,711 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 548 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 545 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 96 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.
11-ந்தேதி முதல் திருத்தம்
எனவே பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதில் பிழை ஏதும் இருப்பின் வருகிற 11-ந்தேதி முதல் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தத்தின் போது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் கடந்த 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, தகுதியான நபர்கள் படிவம் 6-ஐ அளிக்கலாம். இறந்துபோன, நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளரின் பெயரை நீக்கம் செய்திட படிவம் 7-ஐ அளித்திடலாம்.
அதிகாரிகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் பாலினம், வயது, உறவு முறை, புகைப்பட மாற்றம் செய்திட படிவம் 8-ஐ விண்ணப்பிக்கலாம். ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு முகவரி மாறுதல் செய்திடவும் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் மனுக் களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர்கள் சரவணமூர்த்தி(கரூர்), விமல்ராஜ் (குளித்தலை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், தேர்தல் தாசில்தார் துரைசாமி மற்றும் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
13 ஆயிரத்து 853 பேர் நீக்கம்
மாவட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 853 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 472 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.