சிட்கோ நகரில் பூங்கா அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நிலம் ஒதுக்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சிட்கோ நகரில் பூங்கா அமைக்கப்படுமா? என அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அம்பத்தூர்,
சென்னை பெருநகரை சுற்றியுள்ள பகுதிகளை அபி விருத்தி செய்யும் நோக்கில் கடந்த 1980-ம் ஆண்டு, அப்போதைய அரசு உத்தரவிட்டதன் பேரில் உலக வங்கியின் உதவியோடு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் இணைந்து ‘வில்லிவாக்கம் பேஸ் 1’ என்ற குடியிருப்பு திட்டத்தை உருவாக்கியது.
அப்போது தொடங்கப்பட்ட இக்குடியிருப்பில் ஏ, பி, சி, டி, இ, எப் என 5 பிரிவுகளில் மொத்தம் 2,490 வீட்டுமனைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கியது.
ஏரியை சமன்படுத்தி உருவாக்கப்பட்ட குடியிருப்பு என்பதால் இது ஆரம்பத்தில் லேக் ஏரியா என்று அழைக்கப்பட்டு பின்பு காலப்போக்கில் அது மாறி, தற்போது சிட்கோ நகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
1980-ம் ஆண்டு சிட்கோ நகர் உருவாக்கப்பட்டபோதே அங்கு பொது பயன்பாட்டிற்கென பூங்கா, சமுதாய கூடம், மருத்துவமனை என அடிப்படை தேவைக்கான கட்டிடங்கள் கட்ட வீட்டுவசதி வாரியத்தால் இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் பூங்காவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கவில்லை. இது குறித்து சிட்கோ நகர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில், அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அரசோ, வீட்டு வசதி வாரியமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடம் பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக தொடங்கியது. மேலும் வேறு பயன்பாட்டுக்கு தேவை என அரசே அந்த இடத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டதால் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடம் சுருங்கியது.
இந்நிலையில் சிட்கோ நகரில் பூங்கா அமைக்க கோரி கடந்த 2007-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, கடந்த 2004-ம் ஆண்டே பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டுமனைகளாக பயன்படுத்திக்கொள்ள வீட்டுவசதி வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்தது தெரியவந்தது.
இந்த அனுமதியை ரத்து செய்து விட்டு, 1980-ம் ஆண்டு வரைபடத்தில் சொன்னபடி சிட்கோ நகரில் பூங்கா அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் 10 ஆண்டுகளாக கோர்ட்டு வாயிலாகவும் அவர்கள் போராடி வருகின்றனர்.
இது குறித்து சிட்கோ நகரில் வசித்து வரும் மக்கள் கூறியதாவது:-
1980-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சிட்கோ நகரில் தற்போது வரை பூங்காவோ, உடற்பயிற்சி கூடமோ, சிறிய அளவில் மருத்துவமனையோ, நூலகமோ எதுவுமே அமைக்கப்படவில்லை.
பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு சில பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகள் பயன்பாடு இன்றி பொது கழிப்பிடமாக மாறிவிட்டது.
இதனை அரசு நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிலம் ஒதுக்கி 38 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இனியாவது பூங்கா அமைக்கப்படுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.