விளக்கு ஏற்றியபோது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
திருவான்மியூரில் வீட்டில் விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலந்தூர்,
சென்னை திருவான்மியூர் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் வரதம்மாள்(வயது 80). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் சாமி கும்பிட சென்றபோது விளக்கு ஏற்றினார். அப்போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. அவரது உடலிலும் தீப்பிடித்து வேகமாக பரவியது. இதில் உடல் கருகி படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி வரதம்மாள் பரிதாபமாக இறந்தார்.
திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(36). பெயிண்டர். மதுபோதைக்கு அடிமையான இவர் அடிக்கடி மதுகுடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் விரக்தியில் இருந்து வந்த நந்தகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.