அடகு வைத்த ரூ.77 லட்சம் நகை மோசடி கூட்டுறவுசங்க செயலாளர் கோர்ட்டில் சரண்

விருதுநகர் சத்திரரெட்டியபட்டி தொடக்க கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக இருந்தவர் அக்கீம்.

Update: 2018-01-09 21:45 GMT

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி தொடக்க கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக இருந்தவர் அக்கீம். திருமங்கலத்தை சேர்ந்த இவர் சங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.77 லட்சம் மதிப்புள்ள அடகு நகைகள் மற்றும் அதற்கான ஆவணங்களுடன் தலைமறைவாகிவிட்டார். இது பற்றி ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் சங்க செயலாளர் அக்கீம் முறைகேடு செய்து அடகு நகைகளை மோசடி செய்ததாக வணிகவியல் குற்ற புலனாய்வு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சங்க செயலாளர் அக்கீமை தேடி வந்தனர்.

 இந்த நிலையில் நேற்று அவர் விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாள் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்