தூத்துக்குடி–நெல்லை நெடுஞ்சாலையில் 25 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
தூத்துக்குடி–நெல்லை நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்பில் இருந்த 25 கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி–நெல்லை நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்பில் இருந்த 25 கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணிதூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி–நெல்லை தேசிய நெடுஞ்சாலை அருகே மழைநீர் செல்வதற்கு இடையூறாகவும், சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
கடைகள் அகற்றம்
இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் முதுடையார், மேலாளர் பிரதீப் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதில் 25 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன. மேலும், இந்த சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.