உப்பள்ளி, தார்வாரில் முழு அடைப்பு அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை
தலித் மாணவியை கற்பழித்து கொன்றதை கண்டித்து, தலித் அமைப்பு சார்பில் உப்பள்ளி, தார்வாரில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை.
உப்பள்ளி,
விஜயாப்புரா புறநகர் ஆதர்ஷ்நகரை சேர்ந்த 16-வயது தலித் மாணவியை கடந்த மாதம் மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்தனர். இந்த கொலை குறித்து விசாரித்துவரும் சி.ஐ.டி. போலீசார் 4 பேரை கைது செய்திருப்பதுடன், இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியின் கொலையை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் தலித் அமைப்புகள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.
இதேபோல் மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து உப்பள்ளி, தார்வார் பகுதிகளில் தலித் அமைப்புகள் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தன. அதன்படி நேற்று உப்பள்ளி, தார்வார் பகுதிகளில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தையொட்டி வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைந்திருந்தார்கள்.
இந்த போராட்டத்தையொட்டி நேற்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஏதும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், வாடகை கார்களும் ஓடவில்லை. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 3-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆட்டோக்கள், பஸ்கள் என எதுவும் இயங்காததால் குறிப்பிட்ட நேரத்திற்கு தேர்வுக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே நேற்று காலை 10 மணியளவில் தலித் அமைப்பினர் உப்பள்ளி டவுன் ராணி சென்னம்மா சர்க்கிளில் இருந்து புறப்பட்டு உப்பள்ளி-கதக் ரோடு, அம்பேத்கர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
மேலும் பல இடங்களில் டயர்களை தீவைத்து எரித்ததுடன், மாணவியை கொலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் உப்பள்ளி ரெயில்வே சாலையில் தலித் அமைப்பு சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தலித் அமைப்பினர் உப்பள்ளி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம் என்பதால் அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் உப்பள்ளி பழைய பஸ் நிலையத்தில் உள்ள டிக்கெட் வழங்கும் மையத்தை போராட்டக்காரர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் அந்த மையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது.
இதேபோல் தார்வார் டவுனில் போராட்டக்காரர்கள், அந்த வழியாக வந்த லாரி ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரியின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. மேலும் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்களில் போராட்டகாரர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்தையொட்டி நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் பொம்மனஹள்ளி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் போராட்டம் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் நேற்று காலையில் திடீரென அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் காந்தி மார்க்கெட், கணேஷ்பேட்டை மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் உப்பள்ளி, தார்வார் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதேபோல் நேற்று பெலகாவி மாவட்டம் சிக்கோடி, கதக் மாவட்டம் முண்டாகி ஆகிய பகுதிகளிலும் தலித் மாணவி கொலையை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.