நிலத்திற்கு பட்டா வழங்க கோரி சுதந்திர போராட்ட தியாகியின் மகன் தர்ணா

நிலத்திற்கு பட்டா வழங்க கோரி சுதந்திர போராட்ட தியாகியின் மகன் தர்ணா

Update: 2018-01-08 22:30 GMT
தர்மபுரி,

அரூர் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கோவிந்தசாமி செட்டியார் என்பவருடைய மகன் காந்தி(வயது 70). இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து கோரிக்கையை கேட்டறிந்தனர். அப்போது அவர் கூறுகையில், கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர போராட்ட தியாகியான எனது தந்தைக்கு வழங்கப்பட்ட 3 ஏக்கர் நிலத்திற்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதியவரின் திடீர் தர்ணா போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்