வட்டியுடன் அசல் தொகை செலுத்தியும் மேலும் ரூ.60 ஆயிரம் கேட்டு மிரட்டல், கந்து வட்டி கொடுமை குறித்து கலெக்டரிடம் பெண் புகார்
வட்டியுடன் அசல் தொகை செலுத்தியும் மேலும் ரூ.60 ஆயிரம் கேட்டு மிரட்டுவதாக கந்துவட்டி கொடுமை குறித்து கலெக்டரிடம் பெண் புகார் மனு கொடுத்தார்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் நடைபாதை வசதி, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அன்னூர் அருகே கெம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 33) தனது மகள் கீர்த்தனா (16), மகன் ஹரிகரன் (14) ஆகியோருடன் வந்து மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ள தாவது:-
எனது கணவர் வீரமணி கார் டிரைவராக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு விபத்தில் சிக்கினார். இதனால் மருத்துவ சிகிச்சைக்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் நான் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினேன்.
பின்னர் நான் வாங்கிய கடன் தொகைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 1½ ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் செலுத்தி வந்தேன். மேலும் கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி தரும்படி நெருக்கடி அளித்தார். இதனால் நான் வட்டி, அசல் என மொத்தமாக ரூ.60 ஆயிரம் கொடுத்து விட்டேன். தற்போது கடன் கொடுத்தவர் மீண்டும் என்னிடம் ரூ.60 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
மேலும் இதுதொடர்பாக எனது கணவரையும் அவர் மிரட்டி வருகிறார். இது குறித்து அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே தாங்கள் இந்த கந்து வட்டி கொடுமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, துணைத்தலைவர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் காளை மாட்டுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் தற்போது நாட்டு மாடு இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே நாட்டு மாடு வளர்ப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். நாட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் வட்டியில்லா கடன் அளிக்க வேண்டும்.
நாட்டு மாடு மூலம் கிடைக்கப்பெறும் பாலை கொள்முதல் செய்து, அதனை ஆவின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும் நாட்டு மாட்டின் பால் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு வளர்க்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணைத்தலைவர் சலீம் மற்றும் கோவை வின்சென்ட் ரோடு பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவை வின்சென்ட் ரோட்டில் பொதுமக்கள் குடியிருந்த வந்த அரசு அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2007-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி வீடுகளில் குடியிருந்தவர்கள் வீடுகளை காலி செய்யும்படி அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
மேலும் இதில் குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதில் குடியிருந்த 356 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று வீடு வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 192 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் கட்டப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளை ஒதுக்க வேண்டும்.