பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானிய தொகை ரூ.25 ஆயிரமாக உயர்வு கவர்னர் அறிவிப்பு
பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானிய தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.
சென்னை,
இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த கவர்னரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கவர்னரின் செயலாளர் ராஜகோபாலும் உடன் வந்தார்.
சரியாக காலை 9.59 மணிக்கு சட்டசபை கூட்ட அரங்கத்திற்குள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தார். சபாநாயகர் இருக்கைக்கு சென்ற அவர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
அதன்பின்னர், காலை 10.01 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், ‘வணக்கம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.
பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழத் தேவையான தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பால் வரையறுக்கப்பட்ட புத்தாயிரம் ஆண்டிற்கான வளர்ச்சி இலக்குகளையும், தேசிய அளவிலான இலக்குகளையும் மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே நமது மாநிலம் எய்தியுள்ள நிலையில், நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளையும் வரையறுக்கப்பட்ட 2030-ம் ஆண்டிற்குள்ளாகவே தமிழ்நாடு எய்த இயலும். இத்தகைய சாதனை, தமிழ்நாட்டில் பொது மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்காக மாநில அரசு எடுத்த முன்னோடி முயற்சிகளாலேயே சாத்தியமாகியுள்ளது.
இந்த அரசு ஏற்கனவே முன்வைத்துள்ள கருத்துகளின் அடிப்படையில், மருத்துவத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேசிய மருத்துவ ஆணையச் சட்ட முன்வடிவில் தகுந்த மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.
விரைவில் தொடங்கப்பட உள்ள, பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உதவித்தொகையின் உச்ச வரம்பு, ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கடுமையான நிதிநிலை நிலவி வரும்போதும், அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2017-ம் ஆண்டைய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த அரசு ஆண்டிற்கு ரூ.14,710 கோடி கூடுதல் செலவில் ஏற்கனவே ஊதியத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஊதியத் திருத்தங்களில் கோரிக்கைகள் பல்வேறு தரப்புகளிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளன. இந்தக் குறைகளையும், கோரிக்கைகளையும் பரிசீலிக்க இந்த அரசு ஒரு குழுவை அமைக்கும்.
இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
காலை 10.50 மணிக்கு கவர்னர் தனது உரையை நிறைவு செய்யும்போது, “நன்றி.. வணக்கம்.. ஜெய்ஹிந்த்.. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தமிழில் கூறினார்.