கொல்கத்தா பற்றிய சில தகவல்கள்...
தற்போது கொல்கத்தா என்றழைக்கப்படும் இந்த நகரம் முன்பு கல்கத்தா என்று அழைக்கப்பட்டது.
* இந்தியாவின் முதல் செய்தி நிறுவனம் கொல்கத்தாவில்தான் தொடங்கப்பட்டது. அங்கிருந்து தான் இந்தியாவின் முதல் செய்தித்தாள் வெளியானது.
* கொல்கத்தாவில்தான் இந்தியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
* ஹூக்ளி நதியின் மீது கவுரா-கொல்கத்தா நகரங்களை இணைக்கப்பட்டுள்ள கவுரா பாலம் மிகப் பழமையானது. 1943-ல் இது திறக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவின் முதல் தபால் நிலைய அலுவலகமும் கொல்கத்தாவில்தான் உள்ளது.
* பிர்லா கோவில், ஜெகநாத் கோவில் ஆகியவை கொல்கத்தாவில் சிறப்பு வாய்ந்த இடங்களாகும்.
* அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம் கொல்கத்தா.
* இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டன் கொல்கத்தாவில் தான் அமைந்துள்ளது.
* பிரபலமான ‘எழுத்தாளர் கட்டிடம்’ அமைந்துள்ளதும் கொல்கத்தாவில்தான்.