கிழக்கு விரைவு சாலையில் அடுத்தடுத்து 10 கார்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு

கிழக்கு விரைவு சாலையில் அடுத்தடுத்து 10 கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-07 22:00 GMT

மும்பை,

கிழக்கு விரைவு சாலையில் அடுத்தடுத்து 10 கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

10 கார்கள்

மும்பை கிழக்கு விரைவு சாலையில் நேற்று மதியம் தனியார் வாடகை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த வாடகை கார் விக்ரோலி பகுதியில் சென்றபோது, திடீரென நடுவழியில் நின்றது. இதனால், அந்த வாடகை காரின் பின்னால் வந்து கொண்டிருந்த 9 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.

இந்த விபத்து கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டிகள் மற்றும் அவற்றில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். இருப்பினும் இந்த விபத்தில் 10 கார்களும் லேசான சேதம் அடைந்தன. மேலும், இந்த விபத்தால் கிழக்கு விரைவு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அந்த கார்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக வாடகை கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 10 கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்